அத்தியாவசிய பொருட்களுடனான ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்களே இவ்வாறு துறைமுகத்தில் தேங்கியுள்ளது.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறு தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply