யாழ்.குருநகர் வீதியில் டயர் கொளுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என கண்காணிப்புகள் மற்றும் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை, குருநகர் வீதியில் டயர் கொழுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.






