
கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு!
மரணித்த த. ஈ.விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நினைவு கூறுவதற்கு நீதி மன்றத்தால் கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர் ந. சங்கீத்துக்கு அக்கரைப்பற்று நீதி மன்றத்தாலும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்ணனி துணை செயலாளர் அ. நிதான்சனுக்கும் இன்றைய தினம் கல்முனை நீதிமன்றால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் கல்முனை இருதயநாதர் ஆலய பங்கு தந்தை தேவதாசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி அப்பாறை இணைப்பாளர் துஷானந் உட்பட 5 பேருக்கு கடந்த 22ம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ம் திகதி இரவு வரை நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்த கட்டளை ஒன்றை வழங்கியிருந்தன .





