வல்வெட்டித்துறையில் குண்டு கண்டுபிடிப்பு…!

வல்வெட்டித்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காணி உரிமையாளர் வீடு கட்டுவதற்காக அத்திவார கிடங்கை வெட்ட முற்பட்டபோதே குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை உதவியுடன் குறித்த குண்டை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் மிதந்துவந்த 28 கிலோ மஞ்சள் மூடை அனலைதீவில் மீட்பு…!

Leave a Reply