பொலன்னறுவை திம்புலாகல-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், வீட்டில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில், 19 வயதுடைய அயேஷா குமுதினி எனும் இளம் பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு சில தினங்களுக்குள் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
மேற்குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை , புதிதாக வீட்டு பாவனைக்காக கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டரை , மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.






