
யாழ்ப்பாணம்,செப் 25
தியாக தீபம் திலீபனை அஞ்சலி செய்யும் வகையில் நல்லூரில் உள்ள அவருடைய நினைவாலயத்திற்கு அருகில் அடையாள உண்ணாவிரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் முன்னெடுப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இந்த போராட்டம் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட பின்னர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.





