கேரள கஞ்சாவுடனும் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது!

மட்டக்குளி பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் பொலிஸார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 6 கிலோ 542 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலையில் காவலரணில் கடமையாற்றிவந்த பொலிஸ் அதிகாரி ஒருவருவம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிலோ 191 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

டிசம்பரில் நான்கு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Leave a Reply