திருமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கந்தளாய், சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது!

Leave a Reply