இலங்கையில் ஆண்கள் 16 பேர் உட்பட 26 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 பெண்களும் 16 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,833 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து தற்போது சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,795 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நிகழ்வு!





