அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன், அலவாங்கு மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






