உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

க.பொ.த. சாதாரண தரத்தில் ஒரே தடவையில் தோற்றி உயர்தரத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வீதம் ஒரு வலயத்திலிருந்து 30 மாணவர்களை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 99 கல்வி வலயங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தத் திட்டத்தின் ஊடாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 970 மாணவர்கள் நன்மையடைவர் என மேலும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply