
கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 83 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் இரண்டு தேரர்கள் இன்றைய தினம் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதிவான் அனுமதியளித்துள்ளார்.
அதேநேரம் ஏனைய 80 பேரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அடக்குமுறைக்கு எதிராக என்ற தொணிப்பொருளின் கீழ் சோசலிச இளைஞர் சங்கம் குறித்த ஆர்ப்பாட்டத்தை நேற்று முன்னெடுத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருதானை – டீன்ஸ் வீதி பகுதியில் வைத்து காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிற செய்திகள்





