
ஒரு கோடியே 95 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் தம்வசம் வைத்திருந்த 218 கையடக்க தொலைப்பேசிகள், 8 தங்க பாளங்கள் என்பனவும் கைப்பற்றபட்டதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், 22 இலட்சம் பெறுமதியான இரண்டு தங்க சங்கிலிகளும், 60 ஆயிரம் பெறுமதியான மடிக்கணனி ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்





