வியாபாரத்தில் தொற்றாளர்கள்!

சாவகச்சேரியில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் மக்கள் அவதானத்துடன் செயற்படுங்கள் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களையும் மீறி சிலர் வீடுகளில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களைக் கிழித்தெறிந்து விட்டும் சந்தையில் நடமாடித் திரிகின்றனர்.

இதனால் சமூகத்தில் மீண்டும் மற்றுமொரு கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளது.
ஆகவே, சந்தைக்கு செல்பவர்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடவுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply