ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும் பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply