மந்தபோசனை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை? வெளியான தகவல்

அம்பாந்தோட்டை பகுதியில் மந்தபோசனம் குறைபாடு இல்லை என மாவட்ட செயலாளர் எச். பி சுமன சேகர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பகுதியில், ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பகுதியிலேயே விவசாய செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் அங்கு மந்தபோசனை நிலை காணப்படுவதாக வெளியான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு வெளியான செய்தியில் எந்தவொரு பொறுப்புக்கூறும் நபரை மேற்கோள்காட்டவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply