
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான 23 வயது இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்புக்குச் சென்றிருந்த காலத்தில் உயிர் கொல்லி ஹெரோய்னுக்கு இவர் அடிமையாகியுள்ளாரென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் வந்த பின்னர் உயிர் கொல்லி ஹெரோய்ன் பாவனையிலிருந்து விடுபடுவதற்காக முறையற்ற மருத்துவ சிகிச்சைகளை அவர் தனியார் மருத்துவமனையில் பெற்றுள்ளார்.
அதன் காரணமாக சில காலங்களின் பின்னர் மீளவும் உயிர் கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அவர் அடிமையானாரெனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





