<!–
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் தரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்து குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் இன்று (திங்கட்கிழமை) பதிவிட்டுள்ள அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






