பேரூந்தில் சிறுநீரக ஆய்வு கூடம் – சீனா வழங்கிய அன்பளிப்பு

நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடம் பொருத்தப்பட்ட எட்டு பஸ்களை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நன்கொடையின் பெறுமதி 660 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இலங்கையில் சிறுநீரக நோய் பொதுவாக காணப்படும் எட்டு மாவட்டங்களுக்கு இந்தப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் வழங்கப்பட உள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply