மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்பு- ஏறாவூர், தளவாய் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி கித்துள் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீதர் என்பவரே பண்ணையினுள்ளே உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 10.30 மணியளவில் சடலம், பிரதேச இளைஞர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன்பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரதேச இளைஞர்கள்,  உறவினர்கள் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் ஆகியோர் காணி உரிமையாளர்களுடன் குறித்த உயிரிழப்பு தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply