உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்
தாய்நாட்டிற்காக உயிர்நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மாவீரர் நாளான இன்று காலை நந்திக்கடல் பகுதியில் சென்று உயிரிழந்த உறவுகள் அனைவருக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






