மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஒப்புதல்

1981ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தத் (திருத்த) சட்டமூலத்தின் மூலம் மூன்று முக்கிய விடயங்கள் திருத்தப்படவுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பெயரை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாக மாற்றுவது, மஹாபொல அறக்கட்டளையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிப்பது மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின்கீழ் இந்த நிறுவனங்களைக் கையாள்வது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply