மேல் மாகாணத்தில புதிய தமிழ் கூட்டணி உருவாக்க முயற்சி!

விரைவில் கொழும்பு உள்ளிட மேல் மாகாணத்தில் புதிய தமிழ் கூட்டணியை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு போன்ற பல தேவைகள் அண்மை காலமாக முன்னெடுக்கபடவில்லை

இந்நிலையில்,தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளுக்கு அப்பால் நடைமுறை பிரச்சனைகளும் உள்ளன.இதனை அடிப்படையாக கொண்டு ஒற்றுமையான கூட்டணி ஒன்றினை உருவாக்க ஜனநாயக மக்கள் காங்கிரஸ் புதிய முயற்சியினை முன்னெடுக்க உள்ளது.

இதன் முதற் கட்டமாக புதன்கிழமை மாலை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் விஷேட முடிவுகள் எடுக்க படவுள்ளது..

பிற செய்திகள்

Leave a Reply