
கொழும்பு, நவ.27 குருநாகல் – நிக்கரவெட்டி பிரதேசத்தில் நேற்றைய தினமும் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தது. இதனால், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்ட போதும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்துடன், நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் பதிவான ஆறாவது வெடிப்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
நிக்கரவெட்டி பிரதேசத்தின் கந்தேகெதர பிரதேசத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதால் பாதிப்புக்கள் தவிர்க்கப்படன. எனினும், சொத்துக்களக்கு சேதம் ஏற்பட்டிnருந்தது.
இதேவேளை கடைந்த 13ஆம் திகதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்ழா கதுன்பிட்டி பிரதேசத்தில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் நேற்று முந்தினம் உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்களுடன் இணைநத்து இந்த மாதத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக 6 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி வெலிகம – கப்ரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றிலும் கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலும் 20 ஆம்திகதி கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்திலும் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.
இந்த வெடிப்பு சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதோடு பாவணையாளரின் கவனயீனமே இதற்கான காரணம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.
எவ்வாறிருப்பினும் இவ்வாறு தொடர்ச்சியாகப் பதிவாகிக் கொண்டிருக்கும் வெடிப்பு சம்பவங்ககளுக்கான உண்மை காரணியை அறிந்து நுகர்வோர் மற்றும் பாவணையாளரான பொது மக்களின் உயிர் பாதுகாப்பு அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






