யாழில் பதற்றம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோர் விரட்டியடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாண நகரில் சமூகநீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தேசிய கொடி ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இதையறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார்இ தற்போதுள்ள நிலையில் இவ்வாறு ஆட்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடாத்த முடியாது என கூறி பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறுமாறு எச்சரித்துள்ளனர்.

அத்துடன்இ அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது.

இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் விவசாயிகள்இ அலுவலக உத்தியோகத்தர்கள் இ பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலைஇ சொறிக்கல்முனைஇ 4ஆம்இ 5ஆம்இ 6ஆம்இ 12ஆம் கொளனிகள்இ நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால் விதைக்கப்பட்ட நெற் பயிர்கள் அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

Leave a Reply