கொழும்பு – பாரோன் ஜயத்திலக்க மாவத்தையில் புனரமைக்கப்பட்டு வரும் கபூர் கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து, கடற்படை வீரர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்படை வீரர், கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளார்.
அவரை உடனடியாக மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






