
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.
இநடத நிலையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவப் படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைகழக சூழல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.





