நினைவேந்தலைத் தடுக்க மன்னார் நீதிமன்று மறுப்பு!

மன்னாரில் மாவீரர் தினத்துக்குத் தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பத்தை மன்னார் நீதிவான் நீதிமன்று நேற்று நிராகரித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகரசபைத் தவிசாளர் ஞா. அன்ரனி டேவிட்சன், உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கு எதிராகவே தடை விதிக்குமாறுகோரி மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மன்னார் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும், போதிய சாட்சியங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையால், பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மன்னார் நீதிமன்று நிராகரித்தது.

Leave a Reply