தொடர்கிறது கனமழை: 50 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

வவுனியாவில் சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதி வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

அதன்படி, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேருமாக மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. அவை பற்றிய முழுமையான தகவல்களை இடர்முகாமைத்து நிலையம் சேகரித்து வருகின்றது.

Leave a Reply