லிந்துலை பகுதியில் புனித மரியாள் சிலை விஷமிகளால் உடைப்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் நேற்றிரவு (26) மர்ம நபர்களின் செயற்பாட்டால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றின் ஓரத்தில் வீசப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையகப் பகுதியில் கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்களினால் தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply