முள்ளிவாய்க்கால் மண்ணில் ஊடகவியலாளர் ஒருவரை காட்டுமிராண்டித்த தனமாக தாக்கிய இராணுவத்தினரின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஊடகங்கள் தான் சமூகத்திற்கு அவவசியமான உண்மைச் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற மகத்தான பணியை செய்கின்றன.
இந்த நிலையில், ஊடகவியாளர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் என்பது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விடயம்.
ணையிட்டில் காணப்படுகின்ற ஊடகங்கள் சுயாதீனமாகவும் ,எத்தகைய அச்சுறுத்தலுமின்றியும் செயற்படவேண்டியவை.
அவ்வாறான ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்குவது என்பது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படுகின்ற சவாலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே, காட்டுமிராண்டித்தனமாக ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
மேலும், இது தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகமும் தமது அழுத்தங்களை உடனடியாக இலங்கை மீது பிரயோகிக்க வேண்டும் .
அதேபோன்று பாதிக்கப்பட்ட ஊடகவியாளருக்கு தேவையான சட்ட நடிவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருப்பத்தாவும் மேலும் அவர் தெரிவித்தார்.






