மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும் கைது!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும்கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் தினமான இன்று உயிர்நீத்த மாவீரர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரையில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக தெரிவித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கு தாயக பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்றைய தினம் மாவீரர் தினம் உணர்வு ரீதியாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் பொலிஸார் மற்றும் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

Leave a Reply