AMCA விமானங்களுக்கான கட்டமைப்பு தயார்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பான அதிநவீன மத்திய எல்லை போர் விமானங்களுக்கான உடலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக ADA நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வடிவமைப்புகள் சிறப்பாக 5ஆம் தலைமுறைக்கு உரியவையாக இருக்கும் எனவும் அறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவன பிரதானி சம்மர் v கம்மெட் குறிப்பிடும் போது, வடிவமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் முழுமையடையவில்லை.

ஆனால் இவற்றின் அடிப்படை வடிவங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.இதனைக் கொண்டு விமானத்தின் முழுமையான மாதிரி ஒன்று செய்யப்பட்டதன் பின்னரே அரசாங்க உத்தரவு பெற முடியும் எனக் கூறி உள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது,

2022-2023 ஆம் ஆண்டுகளிற்கான நிதி ஒதுக்கீட்டில் இது முக்கிய பங்கு வகிக்கும் எனவும், இந்த தயாரிப்பு திட்டத்தில் இந்தியாவின் சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் கலந்துகொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

ஆத்தமநிற்பார் பாரத் திட்டத்திற்கு இது மிகப்பெரிய பங்களிப்பு ஒன்றை செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply