
நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருட்களின் விலைகள் அதிகரித்துவருகின்றது.
அதேவேளை மறுபுறம் எரிபொருட்களின் விலைகளும் இடையிடையே அதிகரிப்பு மற்றும் விலைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான நிலையில் இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டைன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ஆகவும், ஒக்டைன் 95 இன் விலை லிட்டருக்கு 30 ஆகவும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விலைக்குறைப்புக்கு அமைய 92 ஒக்டைன் பெட்ரோலின் புதிய விலை 410 ஆகவும், 95 ஒக்டைன் பெட்ரோல் லிட்டர் 510 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
இதேவேளை மற்ற எரிபொருட்களின் விலை முன்பு இருந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





