சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் மற்றும் மணியந்தோட்டம் கர்த்தர் ஆலய பங்கு என்பவற்றின் ஆதரவிலும் ஒன்றிணைந்த சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு அதன் இளையோர் கழகம் என்பவற்றின் பங்களிப்போடும் இணைந்த கரங்கள் முன்னெடுத்த இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
யாழ் மணியந்தோட்டம் கர்த்தர் ஆலய வளாகத்தில் இன்று காலை முதல் மதியம் வரை இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதன் போது பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பொது மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





