
Today Rasi Palan 28th November 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புதிய விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
மிதுனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
கடகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வட்டம் விரியும்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமாக நாள்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி: எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.
துலாம்: குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களில் சிலரைஇப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மனசு மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள். செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.
மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.