கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.