
ஸ்ரூடியோ 96 (Studio 96 ) தயாரிப்பில் Black feathers creations வழங்கும் ‘சுழியம் ‘
( SUZHIYAM ) குறுந்திரைப்படம் நாளை திங்கட்கிழமை ( 29.11.2021 ) மாலை 7 மணியளவில் YouTube ல் வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம், கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக் குறுந்திரைப்படத்தினை நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் கதையமைப்பில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு அழகாக படமாக்கியுள்ளனர்.
இரண்டு பாகங்களாக வெளி வர இருக்கும் இக்குறுந்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 01.12.2021 புதன்கிழமை அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இத்திரைப்படத்தில் கல்முனை பிராந்தியத்தில் முதல் முறையாக Cartoon animation தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதுடன்… கல்முனை பிரதேச குறுந்திரைப்பட எதிர்கால பாதைக்கு புதிய பரிமாணத்தை தரும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
