முச்சக்கரவண்டியில் நாய் மோதியதில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!

திருகோணமலை, கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கிண்ணியாவில் இருந்து சுரங்கல் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நாய் ஒன்றுடன் மோதியதில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எப்.பாரூக் என்பவரே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் வேன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் காயம்!

Leave a Reply