இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

சுயாதீன ஊடகவியலாளரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து, இன்று முற்பகல் 12.00 மணிக்கு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே இப்போராட்டம் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதலை மேற்கொண்டு சித்திரவதை புரிந்த நிலையில், ஊடகவியலாளர் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளரை தாக்கிய மூன்று இராணுவத்தினர் கைது!

Leave a Reply