கண்டி விபத்து: நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!

கண்டி – குருதெனிய வீதியில் மகாவலி ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்து நீரிழ் மூழ்கி காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தது.

விபத்தில் சிக்கிய மூவரில் இருவர் மீட்கப்பட்ட நிலையில், காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காணாமல்போன 39 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டியில் விபத்து: நீரில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

Leave a Reply