முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் மூவருக்கும் இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் தொடராக எழுந்த அழுத்தம் காரணமாக இன்று காலை அவர்கள் மூவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.






