நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 27 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,305 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்; தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 561,778 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 532 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 562,000 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,662 ஆக அதிகரித்துள்ளது.
வல்வெட்டித்துறை கடற்கரையில் தொடர்ச்சியாக மீட்கப்படும் சடலங்கள்!






