யாழிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது!

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

கந்தரோடையில் உள்ள பொன்னுத்துரை சந்திரகுமார் என்பவரது வீட்டிலேயே எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியில் இருந்தமையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply