கடும் மழை காரணமாக மன்னாரில் மூழ்கியுள்ள தாழ்நில கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக மன்னார் பேசாலை,தலைமன்னார் சாந்திபுரம்,ஜீவபுரம்,ஜிம்றோன் நகர்,மடுக்கரை,உட்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது அதே நேரம் மன்னார் வைத்திய சாலை பிரதான வீதி எழுத்தூர்,தாழ்வுபாடு வீதிகளும் முற்றிலுமாக நீரினால் மூழ்கியுள்ளது.

தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருவதனால் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் சில பகுதிகளில் கடல் நீர் மட்டம் அதிகரித்து கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக, வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் மக்கள் பெரும் அவஸ்தைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply