திருமலை – கிண்ணியா பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம்

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் உள்ள வீடொன்றிலும் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.

கிண்ணியா – ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், இன்று (28) பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த வீட்டார், வெளியில் ஓடி வந்து பிறரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இச்சிலிண்டர் வெடிப்பில் ஏற்பட்ட தீப்பரவலினால் ஜன்னல் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும், இச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

Leave a Reply