இன்று வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 6வது நாள்

2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 6வது நாள் இன்றாகும்.

நாடாளுமன்ற அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு 10.00 மணி வரையில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் 5.00 மணி முதல் 5.30 மணிவரைஇ ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

Leave a Reply