தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஆண்டுதோறும் இடம் பெறும் விளையாட்டு விழாவில் கால்பந்தாட்ட சுற்று போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரையிறுதிக்கு தெரிவாகி வெண்கல பதக்கத்தை மன்னார் இளைஞர் கால்பந்தாட்ட அணி சுவீகரித்துக் கொண்டுள்ளது.
2021 ஆண்டுக்கான 23 வது தேசிய விளையாட்டு விழா யாழ்பாண மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்ற நிலையில், 25 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் கலந்து கொண்ட கால்பந்தாட்ட சுற்று போட்டியில் மன்னார் அணி மட்டக்களப்பு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பெற்று கொண்டதுடன் வெண்கலப்பதக்கத்தையும் தமதாக்கி கொண்டுள்ளது.
கடந்த வாரம் இடம் பெற்ற சுற்று போட்டிகளில் முல்லைத்தீவு அணியை தண்ட உதை மூலம் 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தெரிவாகியது.
பதுளை அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியமை குறிப்பிடதக்கது






