யாழில் அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் நினைவஞ்சலி

<!–

யாழில் அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் நினைவஞ்சலி – Athavan News

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனின் தலைமையில்  நடைப்பெற்ற நிகழ்வில், திருமதி சதானந்தன் நினைவுச் சுடரினை ஏற்றி வைக்க, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் பிரதிநிதிகளின் நினைவு பேருரை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், கட்சி உறுப்பினர்கள், அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply