இந்தியாவிடம் 150 கோடி டொலர்களைக் கடனாகக் கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ டிசெம்பர் 10 ஆம் திகதிக்குப் பின்னர் டில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து பஸில் ராஜபகடி பேச்சு நடத்தவுள்ளார்.
இதன்போதே மேற்படி தொகை நிதி கடனாகக் கோரப்படவுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்காகவே கடன் பெறப்படுகின்றது.






